• September 18, 2019
0 Comments

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். மேலும் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும், இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது தனது குழந்தைகளை மாமியாரின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி மாலை 8-ம் வகுப்பு மாணவி அவரது மகள் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் மாணவியை அந்த பகுதியில் உள்ள பாழைடைந்த வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் பயந்துபோன மாணவி கத்தி கூச்சல் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர், தப்பி ஓடிவிட்டார். இந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இது குறித்து அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய செல்வத்தை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *