• September 18, 2019
0 Comments

சென்னை

சென்னை  பூந்தமல்லியை அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் சிலர் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக ஒரவரிடம் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மீட்ட அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *