• September 18, 2019
0 Comments

சென்னை,

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதையே ஸ்டாலின் வேலையாக வைத்துள்ளார். சென்று வென்று வாருங்கள் என்பதற்கே முதலமைச்சர் வரலாற்று சாதனையை  செய்துள்ளார்.  யதார்த்தம், சத்தியம், உண்மையை கூறி வெளிநாட்டு முதலீடுகளை முதலமைச்சர் பழனிசாமி ஈர்த்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *