• September 18, 2019
0 Comments

1945 – இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.

1954 – சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

1968 – பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.

1970 – செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இசுரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

1974 – அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர். சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.

1982 – பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

1989 – அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு செருமனி அகதிகள் மேற்கு செருமனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.

1992 – அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.

1997 – நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.

1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இசுக்காட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – பாக்கித்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.

2012 – லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

2015 – சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *