• September 19, 2019
0 Comments

தஞ்சாவூர்

டெல்லி சங்கீத நாடக அகாடமி சார்பில் தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கம திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து அவர் பேசுகையில், கலைஞர்கள் நாட்டின் அளப்பறிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்த மாதிரியான விழாக்கள் நாட்டின் பல்வேறு கலைகளை போற்றி பாதுகாக்கும் கலைஞர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை ஏற்படுத்தும். இளம் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், மெருக்கூட்டி கொள்வதற்கும் இந்த விழாக்கள் மேடையாக உள்ளது.

தஞ்சையை கலைகளின் பொக்கிஷமாகவும், பெரிய கோவில் தட்சிணமேரூ என்றும் அழைப்பது வியப்புக்குரிய ஒன்றும் அல்ல. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கலைகளின் நுணுக்கங்களை தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான சான்றாக சோழர்கள் கட்டிய இந்த வரலாற்று சின்னம் நிமிர்ந்து நிற்கிறது. சோழர்கள் காலத்துக்கு பிறகு இப்பகுதியில் தழை தோங்கியது.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள் மற்றும் தமிழ் இசை குறித்த குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் பரவலாக கிடைக்கிறது. 6-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழகத்தில் தழைத்தோங்கியது. தமிழ் மொழி போல் இனிமையான மொழி வேறு இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *