• September 19, 2019
0 Comments

தேவையான பொருட்கள் :

சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் – பாதி அளவு,
லெட்டூஸ் இலை – சிறிதளவு,
தக்காளி – 1,
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா – சிறிதளவு,
தேன் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மூன்று நிற குடைமிளகாய்களையும் நீளவாக்கில், சிந்திக்க நறுக்கி கொள்ளவும்.

தக்காளியையும் நீள வில்லைகளாக நறுக்கவும்.

லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.

புதினாவை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய புதினா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலை, குடைமிளகாயை போட்டு அத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *