• September 19, 2019
0 Comments

தேவையான பொருட்கள் :

பாலக்கீரை – 2 கப்
முட்டை – 3 ( வெள்ளைக்கரு மட்டும்)
பெரிய வெங்காயம் – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரையை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

கீரை வதங்கியவுடன் முட்டை வெள்ளைக்கரு ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *