• September 19, 2019
0 Comments

மதுரா:

கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் (எப்எம்டி), புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை எடுத்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த தினமான அன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *