• September 19, 2019
0 Comments
உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக விளாடிமிர் ஜிலென்ஸ்கை கடந்த மே மாதம் பதவி ஏற்றார். இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘தேசத்துரோகத்தில் ஈடுபட்டால் அதிபரைக்கூட உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கூடிய வகையிலான சட்டம் உருவாக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.இந்நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியின் படி தேச துரோகத்தில் ஈடுபடும் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை கடந்த மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பல கட்ட விவாதங்கள் முடிவடைந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம்தேசத்துரோகம் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால்  அதிபரை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *