• September 18, 2019
0 Comments

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட விஜயசாந்தி அளித்த பேட்டியில், ” 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளேன். இந்த 13 ஆண்டுகளில் சினிமா ரொம்பவே மாறிவிட்டது. எனக்கு நிறைய வி‌ஷயங்கள் புதிதாக இருந்தன. கிட்டத்தட்ட பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை போலவே உணர்ந்தேன். 2006-ம் ஆண்டு நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தேன். அதன் பின்னர் அரசியல் பணி, மக்கள் பணியில் முழுதாக ஈடுபட சென்று விட்டேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சில ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு படத்துக்காக கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்த கதையை கேட்டதும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஹீரோக்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்கினால் அதை பற்றி யாரும் எழுதுவதோ பேசுவதோ இல்லை. ஆனால் ஹீரோயின்கள் வி‌ஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள். நான் நடித்த சமயத்தில் என் சம்பளம் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வரும். அதை கண்டுகொண்டதே இல்லை. என் பணிக்காக நியாயமான ஊதியத்தை பெற்றேன்.இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அடுத்து எதுவும் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவில் நடிப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அரசியலையும் மக்கள் பணியையும் கைவிட மாட்டேன் ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *