• September 18, 2019
0 Comments

கோவை காளப்பட்டி அருகே உள்ள கடை வீதியை சேர்ந்த கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர், கடந்த 7-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் கந்தே கவுண்டன் சாவடி அருகே வந்த போது கே.ஜி.சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். கார்த்திக் ஹெல்மெட் அணியாமல் சென்றதை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் ஓட்டுனர் உரிமம், மோட்டார் சைக்கிள் பதிவு எண் நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றை கேட்டு சரிபார்த்தனர். அனைத்தும் சரியாக இருந்ததால், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காகரூ. 100 அபராதம் விதித்து, அவர் அதனை செலுத்தியபின், ரசீதை கொடுத்தனர். வீட்டுக்கு சென்று, கார்த்திக் போலீசார் வழங்கிய ரசீதை பார்த்த போது, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பதிலாக சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *