• September 18, 2019
0 Comments

தியாகி இமானுவேல்சேகரன் நினைவுநாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ” தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்போம் என்பதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி. இந்திய பொருளாதாரத்தின் 5 சதவீத வீழ்ச்சி தான் மோடி அரசின் 100 நாள் சாதனை ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *