• September 18, 2019
0 Comments

ஈரான் நாட்டில் கடந்த 1981-ம் ஆண்டு, பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த சட்டம் அந்த நாட்டு அதிகாரிகளால் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சஹர் கோடயாரி என்ற பெண், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது, அவரை கைது செய்து மூன்று நாள்கள் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர், கடந்த வாரம் விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை. ஆனால், அவருக்கு நிச்சயம் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என மற்றவர்கள் கூறியதால், தண்டனைக்கு பயந்து நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோதும், நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் உலகையே உலுக்கி, பரபரப்பு ஏற்பட்டது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *