• September 18, 2019
0 Comments

இலங்கையில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தொடர்ந்து மத்திய, வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *