• September 18, 2019
0 Comments

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணம், கவாஜா பகாவுதீன் மாவட்ட புறநகர்ப் பகுதியில் தலிபான்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின்படி, அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவம், நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தி, 30 தலிபான் பயங்கரவாதிகளை கொன்றனர். மேலும், ராணுவத்திடம் இருந்து தலிபான்கள் கைப்பற்றி வைத்திருந்த மூன்று வாகனங்களும் இந்த தாக்குதலினால் சிதைந்து போனதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *