• September 18, 2019
0 Comments

2009 பாகிஸ்தான் சுற்று பயணத்தின்போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால், பாதுகாப்பு கருதி சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. தற்போது, இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆட உள்ளது. இந்த பாகிஸ்தான் தொடரில் ஆட விருப்பம் இல்லை என இலங்கை 20 ஓவர் அணி கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சன்டிமால் மற்றும் திசாரா பெரேரா உள்பட 10 வீரர்கள் கூறினர். இதுகுறித்து, பாகிஸ்தான் தொழில் நுட்ப மந்திரி பவத் உசேன் சவுத்ரி தனது டுவிட்டரில் ,” இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் ஆட மறுப்பதற்கு இந்தியாதான் காரணம். பாகிஸ்தானில் ஆடினால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது என்று அவர்களை இந்தியா மிரட்டியது. இதன் காரணமாகவே அவர்கள் ஆட மறுத்துவிட்டனர். இதை விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.இது உண்மையிலேயே மலிவான தந்திரமாகும். விளையாட்டில் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இந்தியாவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய விளையாட்டு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மிகவும் மலிவானது ” என்று கூறினார். இதுகுறித்து இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், ” இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்தனர் என்பதில் எந்த உண்மையும் இல்லை. 2009 சம்பவத்தை மனதில் வைத்து அவர்கள் முடிவை எடுத்துள்ளன. நாங்கள் நாங்கள் வலுவான அணியை பாகிஸ்தான் அனுப்புவோம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்என்ற நம்பிக்கை உள்ளது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *