• September 18, 2019
0 Comments

ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர் வரிசையில், ரோகித் சர்மாவும், தவானும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் டெஸ்ட் போட்டியில், தவான் நீக்கப்பட்ட பிறகு தொடக்க வீரர் வரிசை நிலையாக இல்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியபோது, விஹாரி, ரகானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரராக ஆடிய லோகேஷ் ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாததால், அவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர். மேலும், ரோகித் சர்மாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் ரோகித் சர்மாவை டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எனவே டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் வரிசையில் மாற்றம் செய்யப்படும் என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ” ராகுலின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் அவர் ஒரு நல்ல ஆட்டக்காரர். அவர் அதிக நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்தால் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி விடுவார். டெஸ்ட் ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறக்க ரோகித் சர்மாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு தேர்வுகுழு கூட்டம் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே அடுத்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி தேர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *