• September 18, 2019
0 Comments

தற்போது மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டதால், அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதற்கான வழிமுறைகளை போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டனர். பின் அதனை நடைமுறைப்படுத்தி, அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழி சாலையாக மாற்றினர். இதன்படி, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூட்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *