• September 18, 2019
0 Comments

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள எஸ்.உடுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சரவணன் என்பவருக்கும் அந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் உடுப்பம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ஜெயந்திஉடுப்பம் கிராம மக்களிடம் பணத்தை பெற்று தபால் நிலையத்தில் வைப்பு நிதி செலுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார். ஜெயந்தி மற்றும் சரவணன் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததை கண்ட மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கழிவறையில் இருந்ததை கண்ட தலைமை ஆசிரியர் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். தற்போது, ஜெயந்தி கிராம மக்களிடம் வசூலித்த பணத்தை தபால் நிலையத்தில் முறையாக கட்டாமல் மோசடி செய்ததாக புகார் வந்ததால், கிராம மக்கள் அனைவரும் அவரிடம் சென்று பாஸ்புக்கை கேட்டுள்ளனர். ஜெயந்தி பாஸ்புக் அனைத்தையும் அங்கன்வாடி மையத்தில் வைத்திருந்தாக கூறியதால், கிராம மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற போது, ஜெயந்தி மருத்துவ விடுப்பில் வெளியூர் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு வைத்திருந்த கிராம மக்களின் சேமிப்பு கணக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று விட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் ஆசிரியர் சரவணனிடம் ஜெயந்தி எங்கே? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து பள்ளியில் இருந்து குண்டுகட்டாக இழுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று, அவரை மீட்டு போலீஸ் நியதிற்கு கொண்டு சென்றனர். அப்போது கிராம மக்கள் ஆசிரியை ஜெயந்தி மற்றும் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *