• September 18, 2019
0 Comments

தற்போது இலங்கை முஸ்லிகளுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் கூறியுள்ளார் .
இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பையேற்று மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய மஜ்லிஸ் சூரா கவுன்சிலின் தலைவர் மற்றும் தூதுக்குழுவினர் சபாநாயகர் கருஜயசூரியவை நேற்று முன்தினம் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் . அப்போது இந்த சந்திப்பில் பங்கேற்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஹஜ் கோட்டா தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சிறிது காலத்துக்கு குறைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது வழங்கப்பட்டு வரும் கோட்டா தமக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கின்றது. அதனை அதிகரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *