• September 23, 2019
0 Comments

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி, தமிழக மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் முழு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவிய தகவலை போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் உறுதி செய்துள்ளார். இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளது. தற்போது பயங்கரவாதிகள் தமிழகம், கேரளாவில் முக்கிய இடங்களை குறி வைத்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று வேளாங்கண்ணி தேவாலயம், சபரிமலை ஐயப்பன் கோவில் போன்ற இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் போடப்பட்ட பின்னரே அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *