• September 23, 2019
0 Comments

கடந்த தினங்களாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக சரிந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. தற்போது, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால், நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் 17 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட, குறைந்த அளவே தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியில் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால், ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *