• September 23, 2019
0 Comments

சென்னை,

தமிழக அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கக்கோரியும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு என பல்வேறு கோரிக்கைளை வலியூறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அரசு தரப்பில் அவர்களுடன் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், கடந்த ஜூலை 18-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு மற்றும் இதர மருத்துவ சேவைகளை மருத்துவர்கள் புறக்கனித்தனர் இந்நிலையில் நேற்று முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *