• September 23, 2019
0 Comments

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சாத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சீதா, மஞ்சுளா, பிரியா ஆகிய மூவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கிராமத்தின் அருகே உள்ள மருதை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது, ஆற்றில் பாலம் கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி, சீதா, மஞ்சுளா இருவரும் குளித்தனர். பிரியா மட்டும் குளிக்காமல் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.இருவரும் வெகுநேரமாகியும் மேலே வராததால், அதிர்ச்சியடைந்த பிரியா, அப்பகுதி பொதுமக்களிடம் சென்று கூறினார். உடனே 2பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டபோது சீதாவும், மஞ்சுளாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *