• September 23, 2019
0 Comments

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (22). 7 மாத கர்ப்பிணி.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலத்தூர் டி.எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வரதட்சணை கேட்டு மகளை அடித்து உதைத்து பிஜூ சித்ரவதை செய்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.

விசாரணையில் பிஜூவுக்கும் அவர் வேலை செய்த இடத்தில் இருந்த மனோசாந்தி (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்க தூண்டியது கள்ளக்காதலி மனோசாந்தி என்பது தெரியவந்தது.

இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் திருப்பூர் குமரன் நகருக்கு நேற்று வந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து கேரள அழைத்துச்சென்று ஆலத்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *