• September 23, 2019
0 Comments

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் நவ்ஷெரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய படைவீரர் லான்ஸ் நாயக் சந்தீப் தாபா (35), படுகாயம் அடைந்து உயிரிழந்தார். விசாரணையில் அவர் டேராடூனை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *