• September 23, 2019
0 Comments

நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தின் நீலகிரியில் பெரும் மழை பெய்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் பல இடங்களில் வீடுகளில் தண்ணிர் புகுந்ததில் பொதுமக்கள் பலர் தங்களது இருப்பிடங்களை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டள்ளனர்.

மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்ட பொதுமக்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி கூறுகையில், நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஒரு வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்சார குறைபாடு முழுமையாக நிக்கப்பட்டு தொடர்ச்சியாக மின்சாரம் அளிக்கப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *