• September 23, 2019
0 Comments

சியோமியின் ரெட்மி பிரண்டு புதிய M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதனுடன் இடம்பெற்ற புகைப்படத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm அளவுகளில் உருவாகியுள்ளது. இது அளவில் சற்று சிறியதாகவும், ரெட்மி 7 மாடலை விட தடிமனாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. முந்தைய ரெட்மி 7 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
3சி சான்று பெற்றிருப்பதால், இதில் 10வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்படுவதால் இது ரெட்மி நோட் 8 மாடலாக இருக்காது. ரெட்மி நோட் 8 மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி. சென்சாருடன் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *