• September 23, 2019
0 Comments

ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை முறையே ரூ. 19,990 மற்றும் ரூ. 24,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் எஃப்11 ப்ரோ விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் இரு மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) தற்சமயம் ரூ. 16,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இவை ரூ. 17,990 மற்றும் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. தற்சமயம் ரூ. 21,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முன்னதாக ரூ. 23,990 மற்றும் ரூ. 20,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. குறைக்கப்பட்ட விலை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்டது. விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *