• September 23, 2019
0 Comments

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய சலுகை புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தது. தற்சமயம் கூடுதல் சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் வலைத்தளத்தின்படி புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *