• August 24, 2019
0 Comments

நாடு முழுவதும் ரக்‌ஷாபந்தன் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவாட் மாவட்டத்தில் பாக்வால் என்னும் கற்களை எறிந்து காயப்படுத்தும் வினோத திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற 100 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இரண்டு பிரிவினராக பிரியும் மக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர். வருடம் தோறும் ரக்‌ஷா பந்தன் நாளில், ஷ்ரவன் பூர்ணிமா என்ற பெயரில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த கல் வீச்சு விளையாட்டின் போது மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *