• August 24, 2019
0 Comments

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தை சேர்ந்த சோனை தனது மனைவி தனத்துடன் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது, விக்ரமங்கலம் சாலையில்மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனம் பலியானார். பலத்த காயம் அடைந்த சோனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *