• August 24, 2019
0 Comments

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும் உத்தப்புரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 11-ந்தேதி ராஜேஸ்வரன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, 2 பேருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், அங்கு சென்று தகராறு செய்தனர். இதனிடையே நேற்று மாணவியின் பெற்றோர் மகளிர் போலீஸ் நிலையத்தில், ராஜேஸ்வரன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளித்தனர். இதனடிப்படையில் ராஜேஸ்வரன் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *