• August 24, 2019
0 Comments

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி,கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி போலீஸ் அனுமதியில்லாமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி. பிரவேஷ்குமாரிடம் மனு அளித்தார். அத்திவரதர் தரிசனம் இன்று கடைசி நாள் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டும் அவரது இந்த மனு மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *