• August 24, 2019
0 Comments

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து 12வது நாளாக உயர்மட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டு உள்ளனர். இதில் முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா ஜாவேத் தனது தாயார் கைது செய்யப்பட்ட சில தினங்களுக்கு பிறகு, அவர் தனது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி இரண்டாவது வாய்ஸ் மெயிலை வெளியிட்டுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று ஒரு கடிதமும் எழுதி உள்ளார். வாய்ஸ் மெசேஜுடன் அந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த கடித்ததில் அவர் சொல்லியிருப்பதாவது:- இன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே சமயத்தில் , காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டுக்குள் வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நான் மீண்டும் பேசினால் எனக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன். அதிலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கற்பனை பண்ண முடியாத அடக்குமுறையை நேரிட வேண்டி உள்ளது என்று இல்திஜா ஜாவேத் தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *