• August 24, 2019
0 Comments

டி.என்.பி.எல். சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீரரான பெரியசாமி மொத்தம் 21 விக்கெட்டுகளை (9 ஆட்டம்) வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் டி.என்.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இலங்கை வேகப்பந்து வீரர் மலிங்கா பாணியில் பந்து வீசும் பெரியசாமி யாக்கர் வீசுவதில் வல்லவர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை பெற்ற பெரியசாமி கூறியதாவது:- இது ஒரு சிறந்த அனுபவம். அணியாக செயல்பட்டு நாங்கள் வெற்றி பெற்றோம். எந்த ஒரு போட்டியில் விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆடுவேன். அதே போன்றுதான் இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *