• August 24, 2019
0 Comments

ஆடம்பர காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் அந்த சுவர் இடிந்தது. அதன்போது கார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், ஆகாஷ் முகோபாத்யாய் என்பது தெரிய வந்தது. இவர் பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் என்பது தெரியவந்தது . காரை ஓட்டும்போது ஆகாஷ் குடி போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மிகவும் ஆபத்தான முறையில் காரை ஆகாஷ் ஓட்டி வந்ததாக விபத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆகாஷ் முகோபாத்யாயிடம் விசாரணை மேற்கொண்டார்கள் . இந்த விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *