• August 17, 2019
0 Comments

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக, அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடாந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இறந்தவர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 45) என்பதும், கனகராஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பாக அவருக்கும், மற்றொரு நபருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *