• August 17, 2019
0 Comments

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள மேலகுமிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்குமுத்து (36), ஆண்டி(50), இருளன்(28). இவர்கள் 3 பேரும் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு 3 பேரும் இருவேறு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது இளையான்குடி இந்திராநகர் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற சங்குமுத்துவின் மோட்டார் சைக்கிளும், பின்னால் வந்த இருளன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்து 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் 3பெரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருளன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *