• August 24, 2019
0 Comments

குறிஞ்சிப்பாடி,

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம் (31). கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவரும், அதே கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்ததை தொடாந்து, விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இதனையறிந்த ஆசிரியர் சிவஞானசம்பந்தம், மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்த இளம்பெண் பற்றி அவதூறாக கூறி காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட படத்தையும், மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை நிறுத்தியதால் இதில் மனமுடைந்த அந்த இளம்பெண், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே பெண்ணின் தந்தை,சிவஞானசம்பந்தத்தை சந்தித்து நியாயம் கேட்டபோது ஆத்திரமடைந்த சிவஞானசம்பந்தம், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை, கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குறிஞ்சிப்பாடி போலீசார் சிவஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *