• August 24, 2019
0 Comments

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலில் ஈடுபடுவர்களை போலீசார், கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாராயம் கடத்தி வந்ததாக பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (40), சீர்காழி முதலைதிட்டு பகுதியை சேர்ந்த உமா (38), அளக்குடி மணியாற்று தெருவை சேர்ந்த இந்திரா (38) உள்பட 28 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 ஆயிரத்து 65 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *