• August 24, 2019
0 Comments

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள இறும்பூதிபட்டி சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் ஊழியர்கள் பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனையடுத்து நேற்று காலை அக்கடையின் வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதன் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் கடையின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் இல்லாததால் ஒரு பெட்டி நிறைய வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. தொடாந்து இந்த திருட்டு குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *