• August 24, 2019
0 Comments

கரூர்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (56). முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், கடந்த 11-ந் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை வீடு திரும்பிய கந்தசாமி, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு படுக்கை அறை அலமாரி திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது  தெரிய வந்தது.

இதுகுறித்து உடனடியாக கந்தசாமி வெள்ளியணை போலீசில் கொடுத்ததை தொடர்ந்து,  சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *