• August 17, 2019
0 Comments

குளித்தலை,

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள புனவாசிப்பட்டி நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர்கள் சண்முகம் (26), மணிகண்டன் (30). கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு லாலாபேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்த சென்றபோது, அங்கு வந்த நரசிங்கபுரம் காலனியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவரிடம் அவர்கள் இருவரும் மதுஅருந்த பணம் கேட்டனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சண்முகமும், மணிகண்டனும், சுரேஷை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். அதனை தடுக்க வந்த மேலும் 3 பேரையும் அவர்கள் தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக சண்முகம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், மணிகண்டன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகம், மணிகண்டன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *