• August 17, 2019
0 Comments

நாகர்கோவில்,

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில், 16 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், எனவும், ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணப்பயன் அனைத்தும் வழங்க வேண்டும் என கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

மேலும் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *