• August 17, 2019
0 Comments

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்அரவை ஆலை மற்றும் மீன் தொழில் நிறுவனங்கள் மீது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர் சங்கம், கோழித்தீவனம் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று சின்னமுட்டத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மீன் ஏல கூடத்தில் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், கோழி தீவன மீன் வியாபாரிகள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *