• August 17, 2019
0 Comments

நாகர்கோவில்,

கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் வேமாக நிறம்பி வருகினற்ன. தற்போது மழையின் அளவு குறைந்திருந்தாலும் நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடனே காணப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஏற்கனவே 7 வீடுகள் இடிந்து விழுந்தன. தற்போது நேற்று முன்தினம் நள்ளிரவு நாகர்கோவில் பாறைக்கால்மடத் தெருவில் உள்ள நாராயணன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த வீட்டின் அருகில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியும் இடிந்து சேதம் அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *