• August 17, 2019
0 Comments

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சொத்தவிளையில் ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *