• August 17, 2019
0 Comments

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி இ.சி.ஆர். சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று எதிர்திசையில் புதுச்சேரி நோக்கி கார் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த நிலையில், காரில் பயணம் செய்த சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), சூரியராஜன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயத்தடன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *