• August 17, 2019
0 Comments

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள காளிக்காவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று காலை பழனிச்சாமியை வெளியூருக்கு அழைத்து செல்ல அந்த பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் ஆட்டோவுடன் வந்த போது, வீட்டில் பழனிச்சாமியின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் பழனிச்சாமியின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ‘மர்ம நபர்கள், பழனிச்சாமியின் வீட்டின் பின்புற வாசல் வழியாக நுழைந்ததுடன், அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயை துண்டால் இறுக்கி கட்டி உள்ளனர். பின்னர் அவருடைய கைகளையும் கயிற்றால் கட்டி தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்து உள்ளார் என தெரிய வந்தது.உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைக்காக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *